வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (18:31 IST)

திமுக வெற்றி செயற்கையானது, மீண்டும் வெற்றி பெறுவோம்: ஓபிஎஸ்

திமுகவின் வெற்றி செயற்கையானது என்றும் மக்கள் விருப்பப்படி மீண்டும் அதிமுக வெற்றி பெறும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற கூற்றின் படி மக்கள் விருப்பப்படி அதிமுக மீண்டும் வெற்றி பெறும் என்று கூறினார் மேலும் திமுகவின் வெற்றி செயற்கையானது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
 
 மேலும் தேர்தல் நியாயமாக நடைபெற்றிருந்தால் அதிமுக மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கும் என்றும் நடந்து முடிந்த தேர்தல் என்பது முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல என்றும் மக்களின் விருப்பத்தை ஏற்கும் வகையில் ஜனநாயக ரீதியிலான வாய்ப்பு விரைவில் அமையும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்