வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறாது: வானிலை ஆய்வு மையம்
வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அதன் பின்பு புயலாக உருவெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது
மேலும் இந்த புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரி கரையை நோக்கி செல்லும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக இது வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Edited by Mahendran