வருமானவரி சோதனைக்கும் அரசியல் மாற்றத்திற்கும் சம்பந்தமில்லை - தமிழிசை
வருமான வரி சோதனைக்கும் அரசியல் மாற்றத்துற்கு முடிச்ச போடுவது தேவையற்றது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சசிகலாவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் என சுமார் 150க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று காலை முதல் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமான வரித்துறை சோதனை மத்திய அரசுதான் காரணம் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சில அரசியல் தலைவர்களும் மத்திய அரசு மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
வருமான வரி சோதனைக்கும் அரசியல் மாற்றத்திற்கும் முடிச்சு போடுவது தேவையற்றது. யார் மீது சந்தேகம் உள்ளதோ அவர்கள் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது வருமான வரி சோதாகைக்கு உட்படும்போது வரவேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.