வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 பிப்ரவரி 2020 (19:50 IST)

என்னிடமிருந்து முதல்வர் தப்பவே முடியாது: திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆவேசம்

ஜெயலலிதா மரணம், ஆட்சியில் ஊழல் உள்ளிட்ட விவகாரங்களில் இருந்து முதல்வர் ஈபிஎஸ் என்னிடம் இருந்து தப்ப முடியாது என்றும் அப்படி தப்ப முயற்சித்தாலும் தான் விடமாட்டேன் என்றும் திமுக தலைவர் ஆவேசமாகப் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசும்போது ’இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்வது உறுதி என்றும் லஞ்சம் வாங்குவதிலும் கமிஷன் பெறுவதிலும் பெயர் போன முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் யாரும் தன்னிடம் இருந்து தப்ப முடியாது என்றும் அவர் கூறினார்
 
மேலும் ஜெயலலிதாவின் மரணம், ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் யாரையும் தான் ஒருபோதும் விடப்போவதில்லை என்றும் குறிப்பாக ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவருக்கும் இதனைத்தான் எச்சரிக்கையாகவே தெரிவிப்பதாகவும், ஊழல் ஆட்சி செய்யும் இவர்கள் ஒருநாள் சிறைக்கு செல்வது உறுதி என்றும் அவர் கூறினார்
 
மேலும் சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கு மட்டும் பாதிப்பு என யாரும் நினைக்க வேண்டாம் என்றும் இந்துக்களுக்கும் இந்த சட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என்றும் இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் சந்தேகப் பட்டியலில் இடம்பெறும் அவலம் இந்த சட்டத்தால் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். முக ஸ்டாலினின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது