செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 26 பிப்ரவரி 2020 (14:35 IST)

குரூப் 1 முறைகேடு ? உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு ...

சமீபத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதன்படி சிபிசிஐடியின் அதிரடி விசாரணையில் பல ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரே மாவட்டத்தைத் தேர்வு செய்த தேர்வர்கள், அழியும் மையினால் தேர்வு எழுதியதாகவும், அதற்கு  அரசு ஊழியர்களே பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாகவும் பல உண்மைகள் விசாரணையில் வெளிவந்தன.
 
இதில், நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், குரூப் 1 தேர்வு முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி  உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி சார்பில்  வழக்கு தொடுத்துள்ளார்.
 
மேலும், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது என்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.