வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 பிப்ரவரி 2020 (14:25 IST)

ராஜ்யசபா எம்பி ஆகின்றாரா ஸ்டாலின் மருமகன்: திமுகவில் பரபரப்பு

ராஜ்யசபா எம்பி ஆகின்றாரா ஸ்டாலின் மருமகன்
வரும் மார்ச் 26ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து 6 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதில் அதிமுகவுக்கு மூன்று இடமும், திமுகவுக்கு மூன்று இடமும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் திமுகவில் இருந்து தேர்வு செய்யப்படும் ராஜ்யசபா எம்பி க்கள் யார் என்பது குறித்த கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. தற்போது எம்பியாக இருக்கும் திருச்சி சிவா உள்பட மூவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்றும் மூன்று புதியவர்கள் தான் ராஜ்யசபா எம்பியாக இருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 
 
குறிப்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் மருமகன் சபரீசன் ராஜ்யசபா எம்பியாக வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கனிமொழியின் செயல்பாட்டை கட்டுப்படுத்த டிஆர் பாலுவை டெல்லியில் முன்னிறுத்திய திமுக தலைவர், தற்போது ராஜ்யசபா எம்பியாக சபரீசனை ஆக்கிவிட்டால் அவருக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது 
 
மேலும் தமிழகத்தில் முழுக்க முழுக்க இளைஞரணி உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது போல் டெல்லி திமுகவினரை சபரீசன் கட்டுப்பாட்டில் வைக்க ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது இருப்பினும் திமுகவில் எந்த ஒரு எந்த பொறுப்பிலும் இல்லாத சபரீசனை எப்படி திடீரென ராஜ்யசபா எம்பி ஆக்குவது என்ற கேள்வி கட்சியினர் இடையே எழுந்து உள்ளது. ஆனாலும் சபரீசன் தான் எம்பி என ஸ்டாலின் முடிவு செய்தால் அவரை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை என்பதுதான் உண்மை என்றும் கூறப்படுகிறது