1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 5 நவம்பர் 2021 (13:42 IST)

வெளிநாட்டு கரன்சிகளைப் பயன்படுத்த தடை: தாலிபான்கள் உத்தரவு

ஆப்கானிஸ்தான் நாட்டில் வெளிநாட்டு கரன்சிகளை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக தாலிபான்களை உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்கு வந்தது என்பதும் அதிலிருந்து பல்வேறு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக பெண்களுக்கு எதிரான பல உத்தரவுகள் அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி ஆப்கானிஸ்தான் நாட்டில் இனி அமெரிக்க டாலர் உள்பட அனைத்து வெளிநாட்டு கரன்சிகளை பயன்பாடுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது
 
உள்நாட்டு கரன்சியின் மதிப்பை பொருளாதாரத்தையும் மீட்கும் முயற்சியில் தாலிபான்கள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வெளிநாட்டு கரன்சிகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது