புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (15:39 IST)

தேவர் ஜெயந்திக்கு பேனர் வைக்க தடை..

அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் குருபூஜை கொண்டாடப்படும் நிலையில், பேனர் வைக்க தடை விதித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது பேனர் விழுந்து உயிரிழந்ததிலிருந்து, தமிழகம் முழுவது பேனர் வைக்க கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி, தேவர் ஜெயந்தியை முன்னிட்டு குருபூஜை நடைபெறவுள்ளதை தொடர்ந்து, பசும்பொன்னில் பேனர் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குருபூஜையை ஒட்டி அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.