செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (15:59 IST)

’நித்தியானந்தாவின் கைலாசம் தீவு’... கிரிக்கெட் வீரர் அஸ்வினின் ஆசை....காமெடி நடிகர் கலாய் !

சமீபத்தில் நித்தியானந்தாவின் முன்னாள் உதவியாளர், தனது இரு மகள்களை அடைத்து  வைத்து நித்யானந்தா கொடுமைப்படுத்துவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், குஜராத்தில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்தப் புகாரை அடுத்து  சிறுமிகளை தொந்தரவு செய்தது தொடர்பாக, ,நித்யானந்தா மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவர்  தப்பி ஒடியதாக தகவல்கள் வெளியானது.
 
ஆனால், அதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்தது. அதனால், போலீஸார் நித்யானந்தாவை வலை வீசி தேடி வருகின்றனர்.
 
இந்நிலையில், சர்ச்சைகளில் சிக்குவதையே வாடிக்கையாக கொண்டுள்ள நித்யானந்தா, கைலாஷ் என்ற பெயரில் ஒரு தனித் தீவை வாங்கி அதில் தனிநாடு அமைக்கப் போவதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 
நித்யானந்தா, தென் அமெரிக்கா நாடான ஈகவெடார் அருகில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதில் விர்டுவல் ஹிந்து என்ற பெயரில் ஒரு நாட்டை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின்,  தந்து டுவிட்டர் பக்கத்தில், கைலாச தீவுக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு, காமெடி நடிகர் சதீஸ் தமிழ்படம் -2 வில் தான் நித்தியானந்தா கெட்டப்பில் இருப்பது போன்ற கெட்டப்பில் ஒரு போட்டோ பதிவிட்டு, சொல்கிறேன் பக்த என பதிலளித்துள்ளார். இந்த போட்டோ வைரல் ஆகி வருகிறது.