Daily Horoscope
✕

3 மாதங்கள் கழித்து ஆன்லைன் வந்த நித்தி! – பக்தர்கள் ஹேப்பி!

Written By Prasanth Karthick
Updated: வியாழன், 14 ஜூலை 2022 (12:07 IST)
கடந்த 3 மாத காலமாக சமாதி நிலையில் இருந்து வந்த சாமியார் நித்தியானந்தா நேற்று மீண்டும் பக்தர்களுக்கு ஆன்லைனில் தோன்றியுள்ளார்.

பிரபல சாமியாரான நித்தியானந்தா பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நிலையில் தலைமறைவாக இருந்தபடி அடிக்கடி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார். கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளதாக பாஸ்போர்ட், நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கடந்த சில மாத காலமாக நித்தியானந்தாவின் வீடியோ எதும் வராத நிலையில் அவர் இறந்துவிட்டதாக பேசிக் கொள்ளப்பட்டது. ஆனால் நித்தியானந்தா சமாதி நிலையில் இருப்பதாகவும், ஜூலை 13 குருபூர்ணிமா அன்று சத்சங்கம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட நித்தியானந்தா இனி தொடர்ந்து சத்சங்கங்கள் நடைபெறும் என்றும், தான் இந்த மூன்று மாத காலத்தில் பெரும் தீர்க்கத்தை அடைந்துள்ளதாகவும் அவர் பேசியுள்ளார்.

எல்லாம் காட்டு

AI அம்சத்துடன் இந்திய நிறுவனமான லாவா விராட் கர்வ்: ரூ. 25,000-க்குள் ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன்!

ரோட்டில் தர்ணா செய்த பிரியங்கா காந்தி.. தரதர என இழுத்து சென்ற டெல்லி போலீஸ்..

தனுஷ், சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வராங்களே!.. வைகோ ரியாக்‌ஷன் இதுதான்!..

ரீசார்ஜ் தொகையை உயர்த்திய ஏர்டெல்!.. பயனாளர்கள் ஷாக்

பேரணி நடந்தபோது அசைவம் சாப்பிட்டாரா ராகுல் காந்தி.. பாஜக கிளப்பிய புது சர்ச்சை...

அடுத்த கட்டுரையில்
Show comments