புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : சனி, 9 மார்ச் 2019 (11:26 IST)

சிறையில் மகளிர் தின கொண்டாட்டம்.. பரிசுகளை குவித்த நிர்மலா தேவி..!

மதுரை மத்திய சிறையில் நேற்று மகளிர் தின விழாக் கொண்டாட்டத்தில், மாணவர்களை தவறாக வழிநடத்தியதாக  கைதாகி சிறையில் இருக்கும்  பேராசிரியை நிர்மலாதேவி, ஏராளமான பரிசுகளை வென்றார்.


 
மதுரை பல்கலை கழக உயர் அதிகாரிகளின் இச்சைக்கு இணங்குமாறு கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக  அருப்புக்கோட்டை கல்லூரி உதவி பேராசிரியையான நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு  ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 200 நாட்களுக்கும் மேலாக  பேராசிரியை நிர்மலாதேவி சிறையில் இருக்கிறார். இவருக்கு பலமுறை ஜாமீன் மறுக்கபட்டது. இவர்  மதுரை பெண்கள் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.
 
இந்நிலையில் மார்ச் 8-ம் தேதியான நேற்று சர்வதேச மகளிர் தினம் நாடு முழுவதும் மதுரை மத்திய சிறையில் நடந்தது. 
 
இந்த கொண்டாட்டத்தின் போது,  சிறையில் பெண் சிறைவாசிகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கான நடத்தப்பட்ட மகளிர் தின நிகழ்ச்சியில் கும்மிபோட்டி, பேச்சுபோட்டிகளில் கலந்துகொண்ட பேராசிரியை நிர்மலாதேவி  ஏராளமான பரிசுகளை வென்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறைக் கண்காணிப்பாளர் பரிசுகளை வழங்கினார்.