1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 2 பிப்ரவரி 2019 (15:26 IST)

சிறையில் நிர்மலாதேவிக்கு ஏற்பட்ட கொடூரம்: அவசரம் அவசரமாக மருத்துவமனையில் அனுமதி

சிறையில் இருக்கும் நிர்மலாதேவிக்கு முதுகு வலி அதிகமானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி  மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில்  பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் பேராசிரியை  நிர்மலா தேவி,  துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி  மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக விசாரிக்கப்பட்டு  வருகின்றனர்.
 
அவர் ஒரு வருடமாக ஜாமீன் வழங்கக்கோரி மனு அளித்தும் அவருக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. என்னை மிரட்டி தான் வாக்குமூலம் பெற்றாரகள் என நிர்மலா தேவி சமீபத்தில் கூறி பகீர் கிளப்பினார். மேலும் நிர்மலா தேவி விவகாரத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்  IAS அதிகாரிகள் உள்ளிட்டோர் தொடர்பிருப்பதால் நிர்மலாதேவிக்கு ஜாமின் கொடுக்காமல் இருக்கின்றனர் என நிர்மலா தேவி வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் கூறினார்.
 
இந்நிலையில் சிறையில் இருக்கும் நிர்மலா தேவி முதுவலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இன்று காலை அவரின் முதுகுவலி அதிகரிக்கவே அவர் வலியால் துடித்தார். உடனடியாக அவர் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.