ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Updated : புதன், 19 பிப்ரவரி 2020 (16:38 IST)

மகளிர் தின வாழ்த்து கூறி ஜூலி பதிவிட்ட புகைப்படத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல்  சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள்.


 
பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பிறகு விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது. 
 
அதற்கு ஏற்றார் போல ஜூலியும் இடைவிடாமல் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார். அந்த வகையில் இன்று (மார்ச் 8) மகளிர் தினத்தை முன்னிட்டுட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறி , " பெண்ணாய் பிறந்ததற்காக பெருமை கொள்கிறேன். அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். 
 
அதனை கண்ட நெட்டிசன்ஸ் யாருப்பா உன்னை பெண் என்று சொன்னது ,  உன்ன பொண்ணா நெனச்சதுக்கு நாங்க ரொம்ப வருத்தப்படுறோம் என்று கூறி வறுத்தெடுத்து வருகின்றனர்.