புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 ஜூலை 2020 (12:26 IST)

பாய்லர் வெடித்து விபத்து: பலருக்கு காயம், சிலர் மாயம், ஐவர் மரணம்!

நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. 
 
நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 
 
15 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொழிலாளர்கள் 5 பேரை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் விபத்து நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.