புதன், 6 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (10:16 IST)

தமிழகத்தில் மேலும் ஒரு தடுப்பூசி விரைவில் அறிமுகம்

தமிழகத்தில் மேலும் ஒரு தடுப்பூசி விரைவில் அறிமுகம்
தமிழகத்தில் ஏற்கனவே கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு வகை தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு தடுப்பூசி விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைகோவ் டி- என்ற கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது. 11.6 லட்சம் கோடி சைகோவ் டி தடுப்பூசி விரைவில் தமிழகம் வர இருப்பதாகவும் இந்த தடுப்பூசி மூன்று நாட்கள் 28 நாட்கள் இடைவெளியில் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது
 
தமிழகத்தில் புதிதாக அறிமுகமாக உள்ள தடுப்பூசியை இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பலர் செலுத்தி கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது