1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (23:35 IST)

உக்ரைனுடனான மோதல்: ரஷ்யாவை எச்சரித்த அமெரிக்கா

ஐரோப்பா ராணுவ மோதலின் கொடுங்கனவுக்கு திரும்பி கொண்டிருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் எச்சரித்துள்ளார்.
 
ஸ்வீடனின் நடந்த ஐரோப்பிய பாதுகாப்பு மாநாட்டில் பேசிய லாவ்ரோவ், நேட்டோ கூட்டமைப்பு உலகின் கிழக்குப் பகுதியில் உள்ள நாடுகளை நோக்கி மேலும் விரிவடைவதை தடுக்க புதிய ஐரோப்பிய பாதுகாப்பு ஒப்பந்தம் போடும் யோசனையைப் பகிர்ந்தார்.
 
இந்நிலையில் உக்ரைனுடன் மோத எண்ணினால், மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்யாவுக்கு அமெரிக்காவின் வெளியுறத்துறை அமைச்சர் ஆண்டனி ப்ளின்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை பலப்படுத்தி நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்தது. ரஷ்யா 90,000 படைகளை குவித்து வைத்துள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.