Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: நெல்லை பள்ளி தலைமை ஆசிரியர் கைது!

Written By Mahendran
Updated: வெள்ளி, 7 ஜனவரி 2022 (12:59 IST)
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெல்லையை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளை என்ற பகுதியி உள்ள ஒரு பள்ளியில் படித்துவரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்
 
தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயகுமார் என்பவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பள்ளி தலைமை ஆசிரியரே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

கஜானா காலி!.. பேனா சிலை வைக்க எதுக்கு பிளான் பண்ணீங்க!.. அருண்ராஜ் Vs உதயநிதி காரசார வாக்குவாதம்

எங்களுக்கு யாருடைய உதவியும் வேணாம்!.. நேபாள அரசு மறுப்பு!..

நேபாளம் பேரிடர்.. உயிரை காப்பாற்றி கொள்ள சீனாவில் தஞ்சமடைந்த 400 இந்தியர்கள்...

தலித் சமுதாயத்தை பரிதாபமாக பார்ப்பது ஏன்?!.. சட்டசபையில் பொங்கிய வன்னியரசு!...

10 டன் பேரிடர் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா.. நன்றி தெரிவித்த நேபாள அரசு...

அடுத்த கட்டுரையில்