ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (13:07 IST)

பாலியல் விழிப்புணர்வு குறித்து பாடங்கள் - அன்பில் மகேஷ்

பாலியல் விழிப்புணர்வு குறித்து பாடங்கள் கொண்டு வரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி. 

 
கடந்த சில காலமாக தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் தொல்லைகள் மற்றும் அது தொடர்பான தற்கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் மாணவ, மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சமீபத்திய பேட்டியில், பாடப்புத்தகங்களில் பாலியல் விழிப்புணர்வு குறித்து 2 அல்லது 3 பக்கங்களில் பாடங்கள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும்.

தற்போதைய சூழலில் அதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். குழந்தைகளை பொறுத்தவரை குட் டச், பேட் டச் என்னவென்று தெரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதையும் கொண்டு வந்தால் பெற்றோர்கள், தங்கள் பெண் குழந்தைகளை இன்னும் தைரியமாக, நம்பிக்கையோடு பள்ளிக்கு அனுப்பி வைப்பார்கள் என தெரிவித்துள்ளார்.