வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2020 (12:44 IST)

இன்னும் 3 நாட்களில் நீட்! பதட்டத்தில் கிணற்றில் குதித்த மாணவர்!

மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மன உளைச்சலால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 12 அன்று நீட் தேர்வுகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நீட் நுழைவு தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார் அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர்.

நீட் தேர்வுக்காக பல மாதங்களாக தயாராகி வந்த அவர் சில தினங்களில் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அதிகமான மன அழுத்தம் காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். முன்னதாக நீட் தேர்வு மன அழுத்தத்தின் காரணமாக மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.