1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 ஜூன் 2018 (12:53 IST)

ரஜினி மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்: நாம் தமிழர் கட்சி அதிரடி

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் போராட்டம் கலவரமாக மாறியது என்றும், அது தனக்கு தெரியும் என்றும் கூறினார்
 
போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள்  யார் என்று தெரிந்தும் அவரகளை போலீசில் கூறாதது ஏன் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் 
 
இந்த நிலையில் சமூகவிரோதிகள் ஊடுருவல் பற்றி முன்கூட்டியே தெரிந்தும் காவல்துறையிடம் தெரிவிக்காதது சட்டப்படி குற்றமாகும் என்றும் இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையினர் இன்று பகல் 12:45 மணியளவில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு வழங்கவுள்ளவிருப்பதாகவும் 'நாம் தமிழர் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு செய்யபட்டுள்ளது.
 
ஆனால் காவல்துறையினர்களுக்கு முழு ஆதரவு வழங்கி கொண்டிருக்கும் ரஜினிகாந்த் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்