ஆளும் கட்சியினரால் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு எனது கண்டனங்கள்- எடப்பாடி பழனிசாமி
ஆளும் கட்சியினரால் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனங்கள் என முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 50 ஆண்டுகளாக புதர் மண்டி , குளம் இருக்கும் இடமே தெரியாமல் இருந்த கோதவாடி குளம் அம்மாவின் அரசால் தூர்வாரப்பட்டதன் பயனாக, நேற்று இரவு அக்குளம் நிரம்பியதைத் தொடர்ந்து,அவ்வூரை சேர்ந்த பெண்கள் வருண பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக, குளக்கரையில் பொங்கல் வைத்து சாமி கும்பிடுகிற, பொங்கல் வைத்து வழிபட்ட பெண்களை ஆபாசமாகப் பேசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் பட்டப் பகலில், காவல் துறையினரின் முன்னிலையிலேயே தி.மு.க. குண்டர்களால் தாக்கப்படுகிறார் என்றால், சாதாரண,சாமானிய மக்களின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை, சட்டவிரோத செயல்களைத் தடுத்து நிறுத்த, சட்டரீதியான நடவடிக்கைகளை அஇஅதிமுக முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்,ஆளும் கட்சியினரால் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனங்கள் எனத் தெரிவித்துள்ளார்.