தொடர்ந்து 3வது நாளாக உயரும் சென்செக்ஸ்: போர்நிறுத்தம் காரணமா?
தொடர்ந்து மூன்றாவது நாளாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இன்று காலை மும்பை பங்குச்சந்தை திறந்தவுடன் சுமார் 180 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்தது
இதனை அடுத்து சென்செக்ஸ் தற்போது 58,850 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இன்று காலை தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 70 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது
இதனை அடுத்து தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 17,550 என்ற புள்ளியில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தொடர்ந்து மூன்றாவது நாளாக மும்பை பங்குச்சந்தை உயர்ந்து வருவதற்கு உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நிறுத்தமே காரணம் என்று கூறப்படுகிறது