மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று மீண்டும் உயர்வு!
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று காலையில் சரிந்து மாலையில் உயர்ந்தும் காணப்பட்ட நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று சுமார் 900 புள்ளிகள் உயர்ந்து 57900 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 80 புள்ளிகள் உயர்ந்து 17309 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
கடந்த சில நாட்களாக மும்பை பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது