டார்ச்சர் பண்ண மாமியார்: டென்ஷனில் மருமகன் செய்த வேலை!!!
தந்தையிடம் சொத்தை வாங்கி வரும்படி டார்ச்சர் செய்த மாமியாரால் மருமகன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் அரவிந்த்(21). கல்லூரியில் படித்து வரும் அரவிந்த் அதே கல்லூரியில் தாமரைக்கொடி என்ற ஆசிரியையை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அரவிந்திடம் அவரது மாமியார் அவரது சொத்துக்களை அவரது தந்தையிடம் இருந்து பிரித்து வாங்கும்படி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் அரவிந்த் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.
ஒருகட்டத்தில் மாமியாரின் டார்ச்சர் தாங்காமல் அரவிந்த் வீட்டிலிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து அரவிந்தின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீஸார் காணாமல் போன அரவிந்தை தேடி வருகின்றனர்.