நயன்தாராவிற்காக செய்த வேலை: சிக்கலில் சிக்கிக்கொண்ட விக்னேஷ்சிவன்?
நயன்தாராவை தப்பாக பேசிய ராதாரவியை கண்டித்த விக்னேஷ்சிவன் தற்போது ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் கொலையுதிர் கால பட புரோமோஷனின் போது பேசிய ராதாரவி நயன்தாராவைப் பற்றி சில சர்ச்சையானக் கருத்துகளைக் கூறினார். இதனால் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தனது கண்டனங்களை வெளிப்படுத்தும் விதமாக ஏகப்பட்ட டுவீட்டுகளை போட்டு தாக்கினார்.
அந்த வகையில் அவர் போட்ட ஒரு டுவீட் தான் இப்பொழுது அவருக்கே ஆப்பாக மாறியுள்ளது. அவர் போட்ட ஒரு டுவீட்டில் கொலையுதிகாலம் ஒரு முடிக்கப்படாத படம். அந்த படத்தின் நிஜ தயாரிப்பாளர், இயக்குநர் சில ஆண்டுகளுக்கு முன்பே படத்தை விட்டு வெளியேறிவிட்டனர். அப்படியிருக்க ஏன் இந்த மாதிரியான தேவையில்லாதவர்களை வைத்துக் கொண்டு தேவையில்லாத நிகழ்ச்சி நடத்தவேண்டும் என கூறியிருந்தார்.
விக்னேஷ் சிவனின் டுவீட்டால் இப்படத்தை வாங்கவிருந்த விநியோகஸ்தர்கள் மற்றும் டிஜிட்டல் உரிமையை வாங்க இருந்த நிறுவனமும் தற்போது அதனை வேண்டாம் என்று கூறிவிட்டார்களாம். இதனால் படக்குழு விக்னேஷ்சிவன் மீது மீது வழக்கு தொடர ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.