1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 ஜனவரி 2021 (08:01 IST)

18 வயது நிரம்பாத மகனுக்கு ஸ்கூட்டி கொடுத்த தாய்க்கு நீதிமன்றம் நூதன தண்டனை!

18 வயது நிரம்பாத மகனுக்கு ஸ்கூட்டியை கொடுக்க தாய்க்கு கோவை நீதிமன்றம் நூதன தண்டனை கொடுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கோவையை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கடந்த ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி தன்னுடைய தாயாரின் ஸ்கூட்டரில் நண்பனை அழைத்து கொண்டு சென்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுவனின் நண்பன் படுகாயமடைந்து உயிரிழந்தார் 
 
இதனை அடுத்து இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் 18 வயது நிரம்பாத, லைசென்ஸ் இல்லாத மகனுக்கு ஸ்கூட்டியை கொடுத்த குற்றத்திற்காக அவரது தாயார் பாண்டீஸ்வரி என்பது மீது வழக்கு தொடரப்பட்டது
 
இந்த வழக்கு விசாரணை முடிந்து தற்போது தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாண்டீஸ்வரி காலை முதல் மாலை வரை ஒரு நாள் முழுவதும் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ரூபாய் 25 ஆயிரம் அவதாரமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது
 
இதனை அடுத்து பாண்டீஸ்வரி காலை முதல் மாலை வரை போலீஸ் கூண்டில் நிறுத்தப்பட்டார். 18 வயது நிரம்பாத சிறுவர்களுக்கு இருசக்கர வாகனத்தை கொடுக்கக் கூடாது என்றும் அனைவருக்கும் உணர்த்தும் வகையில் இந்த தீர்ப்பு ஒரு எச்சரிக்கை பாடமாக கருதப்படுகிறது