1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 27 ஜனவரி 2021 (17:46 IST)

மாஸ்டர் பட டிக்கெட் விலை அதிகம்...குற்றம்சாட்டிய விஜய்யின் தந்தை

நடிகர் விஜய்யின் தந்தை சமீபத்தில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு கட்சியைப் பதிவு செய்வதாகத் தகவல் வெளியானநிலையில், இச்ச்செய்தி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆனல் விஜய் தனக்கும் இக்கட்சிக்கும்  சம்பந்தமில்லை என்று தெளிவாக விளக்கம் கொடுத்த நிலையில் விஜய்யின் தாய் சோபாவும் அக்கட்சியிலிருந்து விலகி விஜய்கு ஆதரவளித்தார்.

விஜய் வீட்டில் அவருக்கும் தந்தைக்கும் கருத்து வேறுபாடு இருப்பது பொதுவெளியில் விவாதப் பொருளாக மாறியது.

இந்நிலையில்,இப்பிரச்சனைகளைத் தாண்டி தியேட்டரில் 50% இருக்கைகளுக்கே அனுமதிக்கப்பட்ட போதிலும் பொங்கலுக்கு ரிலீசான விஜய்யின் மாஸ்டர் வசூல் சாதனைப்படைத்துள்ளது. இதனால் மற்ற ஹீரோக்களும் தியேட்டரில் தங்களின் படங்களை ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ரூ.100 மதிப்புள்ள டிக்கெட்டுகள் ரூ.1000 விற்கபட்டுவதாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் குற்றம்சாட்டியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
Sinoj
விஜய்யின் தந்தைக்கும் விஜய்யின் மக்கள் இயக்கத்திற்கும் கருத்து வேறுபாடுள்ள நிலையில் அவரது குற்றச்சாட்டு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.