திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2024 (13:26 IST)

போலி மருத்துவர்கள் இயக்கி வந்த 15-க்கும் மேற்பட்ட கிளினிக்குகள் அதிரடியாக சீல்.....

நீலகிரி மாவட்டம் கூடலூரில் போலி  மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொள்வதாக புகார் எழுந்து வந்தது. 
 
இது தொடர்பாக தமிழக அரசு உத்தரவின் பேரில் மாவட்ட சித்தா அலுவலர் பாலசுப்பிரமணி தலைமையில் இன்று  கூடலூர் நகரில் 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொண்ட குழுவினர் சித்தா கிளினிக்குகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.
 
இந்த ஆய்வின்போது கூடலூரில் 15 க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கிளினிக்குகள் நடத்தி வந்தது தெரியவந்ததை தொடர்ந்து கிளினிக்குகள் சீல் வைக்கப்பட்டது. 
 
இது குறித்து மாவட்ட சித்த அலுவலர் பால சுப்பிரமணியன் கூறியபோது......
 
நீலகிரி மாவட்டத்தில் 47 போலி டாக்டர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் கூடலூரில் 15 போலி டாக்டர்கள் உள்ளனர் என தெரிவித்தார். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.