1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 டிசம்பர் 2020 (08:38 IST)

முதல் நாள் முதல் கட்சியில் இருந்த பொதுச்செயலாளர் பாஜகவுக்கு ஓட்டம்: கமல் அதிர்ச்சி

முதல் நாள் முதல் கட்சியில் இருந்த பொதுச்செயலாளர் பாஜகவுக்கு ஓட்டம்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய முதல் நாள் முதல் அவருக்கு உறுதுணையாக இருந்த கட்சியின் நிறுவன பொதுச்செயலாளர் திடீரென பாஜகவுக்கு ஓட்டம் பிடித்துள்ளது கமல்ஹாசனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன பொதுச் செயலாளர் அருணாசலம் அவர்கள் இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் சேரப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அதற்கான விழா ஒன்று இன்று நடைபெற இருப்பதாகவும் இந்த விழாவில் அருணாச்சலம் தன்னை பாஜகவில் இணைத்துக்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய முதல் நாள் முதல் கட்சியிலிருந்து நிறுவனப் பொதுச் செயலாளராகவும் இருந்து, கமல்ஹாசனுக்கு வலது கரம் போல் இருந்த அருணாசலம் என்பவர் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
அதுமட்டுமின்றி மக்கள் நீதி மய்யம் கட்சியில் உள்ள மேலும் சிலரை இழுக்கவும் பாஜக முயற்சித்து வருவதாகவும் இது குறித்த அதிர்ச்சி அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்படுவதால் கமல் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே திமுக உள்ளிட்ட ஒரு சில கட்சிகளில் இருந்து சிலர் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் கை வைக்கத் தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது