வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2021 (10:38 IST)

இந்த பொங்கலை சமத்துவமாக கொண்டாடுவோம்! – மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழர் பெருமையை உணர்த்தும் தை திருநாள் பொங்கல் விழாவை சமத்துவ பொங்கலாக கொண்டாடுவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் எதிர்வரும் ஜனவரி 14 அன்று பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் மகிழ்ச்சியுடன் தயாராகி வரும் நிலையில் மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் “பண்பாட்டு படையெடுப்புகளைத் துரத்தி அடித்து-தமிழ்ப் பெருமை காத்திடும் தைப் பொங்கல், நம் விழா! தமிழர் திருநாள்-தமிழ்ப்புத்தாண்டு-சமத்துவப் பொங்கல் என உற்சாகத்துடன் கொண்டாடுவோம்! எங்கும் பொங்குக மகிழ்ச்சி! விடியலைக் கொண்டு வரட்டும் உதயசூரியனின் ஒளிக்கதிர்கள்!” என கூறியுள்ளார்.