வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 11 ஜனவரி 2021 (08:18 IST)

இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகளை இயக்குவது தமிழக அரசின் வழக்கமாக இருந்து வரும் நிலையில் வரும் 14-ஆம் தேதி பொங்கல் திருவிழா கொண்டாட இருக்கும் நிலையில் தற்போது தமிழக அரசு இன்று முதல் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது 
 
சென்னையில் இருந்து 4078 பேருந்துகளும் பிற இடங்களில் இருந்து சுமார் 6000 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தினசரி இயக்கப்படும் 2050 பேருந்துகள் தவிர்த்து சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 176 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2226 பேருந்துகள் இயக்கப்படுகிறது என போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
இந்த சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கூட்டத்தின் அளவை பொருத்து சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கவும் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது