கூட்டணி வேணும்னா இடஒதுக்கீடு வேணும்! பாமக – அதிமுக இன்று பேச்சுவார்த்தை!

ramadoss
Prasanth Karthick| Last Modified திங்கள், 11 ஜனவரி 2021 (08:59 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக – பாமக இடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்று நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆளும் கட்சியாக உள்ள அதிமுக தனது தோழமை கட்சியான பாஜகவுடனான கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் பாமக, தேமுதிக உள்ளிட்டவற்றுடன் கூட்டணி குறித்து பேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,

இந்நிலையில் கூட்டணி கட்சியான பாமக சமீப காலமாக வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றது. இந்நிலையில் கூட்டணி குறித்து இன்று அதிமுக அமைச்சர்கள் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட முக்கியமான சிலருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் இடஒதுக்கீடு கோரிக்கை முன்வைக்கப்படும் என்றும் அதை பொறுத்தே கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் பேசிக்கொள்ளப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :