1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 18 ஜூலை 2021 (13:01 IST)

2வது முறையாக இன்று மாலை டெல்லி கிளம்பும் மு.க.ஸ்டாலின் !!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார். 

 
சமீபத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழ்நாடு எதிர்க்கும் என்பது உள்பட 3  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானங்களை அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் இணைந்து டெல்லி சென்று மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டுமென கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
 
இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி தலைவர்கள் அடங்கிய குழு டெல்லி புறப்பட்டு சென்றது. இந்த குழு தமிழக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட்டது.  
 
இந்நிலையில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். நாளை பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேகதாது விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் பேச உள்ளார் என தெரிகிறது.