Daily Horoscope
✕

மக்கள் அனைவரும் மறக்காமல் ஓட்டு போட வேண்டும்! – முதல்வர் வேண்டுகோள்!

Written By Prasanth Karthick
Updated: சனி, 19 பிப்ரவரி 2022 (10:13 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அனைவரும் மறக்காமல் வாக்கு செலுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் பலர் காலை முதலே ஆர்வமாக தனது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் தனது வாக்குகளை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தமிழகத்தின் 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பொதுமக்கள் அனைவரும் மறக்காமல் தனது வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். கோவையில் துணை ராணுவத்தை அழைக்கும் அளவு எந்த பிரச்சினையும் இல்லை” என கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

சபரிமலையில் 24 மணி நேர அஞ்சல் சேவை.. பிரசாதம் பார்சல் சேவை தொடக்கம்...

ஆதி திராவிடர் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்.. புது விதி அமல்.. ! மாணவர்கள் உடனே என்ன செய்ய வேண்டும்?

வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்: ஆதார் இல்லாதவர்களுக்கும் ஆடு, மாடு உண்டு.. புதிய அரசாணை வெளியீடு..

மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் பேர் நீக்கப்பட்டதாக பொய் வதந்தி.. தமிழக அரசு விளக்கம்...

ஆன்லைன் பத்திரப்பதிவில் புதிய புரட்சி.. 3 மாதங்களில் 1,03,705 ஆவணங்கள் பதிவு.. அரசுக்கு 1357.85 கோடி ரூபாய் வருவாய்..

அடுத்த கட்டுரையில்
Show comments