வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (10:44 IST)

புத்தாண்டு அன்று என்னை சந்திக்க வர வேண்டாம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

நாளை புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் தனக்கு வாழ்த்து சொல்ல யாரும் நேரில் வரவேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாளை புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் அதிகரித்து வரும் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகள் காரணமாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் கடற்கரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கொண்டாட்டங்களை தவிர்க்க பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை யாரும் புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்காக நேரில் சந்திக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதே எனக்கு வழங்கும் சிறந்த புத்தாண்டு பரிசு என கூறியுள்ள அவர், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் திமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தருவார்கள் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.