புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (23:22 IST)

மதுபானம் என நினைத்து ஆசிட் குடித்த 3 இளைஞர்கள் பலி

மதுபானம் என  நினைத்து ஆசிட் குடித்த 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மா  நிலத்தில்  உள்ள தலாய் மாவட்டத்தில் வசித்து வருபவர் பாபிராம்  ரியாங். இவரது மனைவி குழந்தையுடன் கஞ்சன்சாராவில் உள்ள தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, அவருக்கு  உடல்  நிலை சரியில்லாமல் போனது. அவரைப் பார்ப்பதற்காக அவரது கணவர் அங்கு வந்துள்ளார். அப்போது உறவினர்கள் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.  அதில், 10 பேர் மது குடித்துள்ளனர்.  பாபிராம் உள்ளிட்ட 3 பேர் அமிலத்தை மதுபானம் என நினைத்துக் குடித்துள்ளார்.  உடனே மயக்கம் போட்டு விழுந்த 3 பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.