குழந்தையை கடித்துக் குதறிய நாய் ! தாய் கண்ணீருடன் வீடியோ
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் சபரி நாத் – தமிழரசி தம்பதிக்கு 2 வயது குழந்தை உள்ளது. சமீபத்தில் அக்குழந்தையை அவரது தாத்தா க் பஜாரிலுள்ள கோல்டன் ஜூபிலி பார்க்கிற்கு அழைத்துச் சென்றிருந்தார்.
அப்போது, 4 தெரு நாய்கள் அக்குழந்தையைக் கடித்துக் குதறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, அக்குழந்தை புதுச்சேரியில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து குழந்தையின் தாய் கண்ணீருடன் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், குழந்தைகளை தனியே பொது இடங்களில் விடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.