505 வாக்குறுதிகளில் இதுவரை 202 செஞ்சாச்சு... மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
திமுக தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகளை 4 மாதங்களில் நிறைவேற்றி இருக்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.
தமிழக சட்டமன்ற தேர்தலின்போது திமுக 500க்கும் அதிகமான வாக்குறுதிகளை அளித்திருந்த நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு வாக்குறுதிகளை அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில் தமிழக அனைத்து துறை செயலாளர்களுக்கும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதில், தேர்தலின் போது அளித்த 500 வாக்குறுதிகளும் அரசாணையாக மாற்றப்பட வேண்டியது அவசியம். வாக்குறுதிகளை நிறைவேற்ற சம்பந்தபட்ட துறை செயலாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
ஒவ்வொரு அறிவிப்பையும் காலத்தை நிர்ணயித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இந்நிலையில் இது குறித்து அவர் பேசியதாவது, திமுக தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகளை 4 மாதங்களில் நிறைவேற்றி இருக்கிறோம். திமுக ஆட்சி அமைந்து இன்றுடன் 4 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள 505 வாக்குறுதிகளில் இதுவரை 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என அறிவித்துள்ளார்.