Daily Horoscope
✕

முதல்வராக முதல் வெளிநாட்டு பயணம்! – துபாய் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Written By Prasanth Karthick
Updated: வெள்ளி, 18 மார்ச் 2022 (13:07 IST)
தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில் தனது முதல் வெளிநாட்டு பயணமாக துபாய் செல்ல உள்ளார்.

தமிழ்நாட்டின் முதல்வராக கடந்த ஆண்டு மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டது முதலாக பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த காலகட்டத்தில் இதுவரை 3 முறை டெல்லி சென்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வராக இதுவரை வேறு எந்த நாட்டுக்கும் பயணிக்கவில்லை.

தற்போது முதல் பயணமாக மார்ச் 25ம் தேதி துபாய் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். துபாயில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிடும் முதல்வர் பின்னர் அங்குள்ள நிறுவனங்கள் சிலவற்றோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எல்லாம் காட்டு

ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் 30 பவுன் தங்க நகை கொள்ளை!..

தேர்தல் தோல்வி எதிரொலி!.. ஈரான் விஷயத்தில் டிரம்ப் எடுத்த முக்கிய முடிவு...

யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு...

காவிரியிலிருந்து நீரை திறந்துவிட கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. டிகே சிவகுமார் கருத்து...

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாத அனுமதி ரத்து - ஷாக் கொடுத்த மலேசிய அரசு..

அடுத்த கட்டுரையில்
Show comments