விடியற்காலையில் சைக்கிள் ஓட்டி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! – வைரலாகும் புகைப்படங்கள்!

MK Stalin
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 4 ஜூலை 2021 (13:13 IST)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை சைக்கிளிங் சென்றதுடன் பொது மக்களையும் சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிப்புகள் குறைந்து வருவதால் மெல்ல ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சாலையில் உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்றார். அப்போது சந்தித்த பொது மக்களை நலம் விசாரித்த அவர், அவர்களது குறை, நிறைகளையும் கேட்டுக் கொண்டுள்ளார். அவரை கண்ட மக்கள் பலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.இதில் மேலும் படிக்கவும் :