திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2021 (14:20 IST)

இப்பவே மைக்கை வீசுறாங்க.. உங்களை மக்கள் வீசுவாங்க! – ஸ்டாலின் கண்டனம்

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் தொலைக்காட்சி சேனல் மைக்கை தூக்கி வீசிய சம்பவத்திற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தி சேனல் ஒன்றின் மைக்கை எடுத்து வீசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் வாயிலாக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் “பத்திரிக்கை சந்திப்பின்போது சன் நியூஸ் மைக்கை தூக்கி வீசியிருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். அதிமுக அமைச்சரவையையே மக்கள் தூக்கி வீசும் காலம் நெருங்கி வருகிறது. ஊடகங்களை மிரட்டுவதும், மமதையும் அதிமுக அமைச்சர்களுக்கு வழக்கமானதுதான்; மக்களின் எதிர்வினை தேர்தலில் எதிரொலிக்கும்!” என்று தெரிவித்துள்ளார்.