குப்பை கொட்ட கட்டணமா? நாங்க ஆட்சிக்கு வந்ததும் பாத்துக்கறேன்! – ஸ்டாலின் கண்டனம்!
சென்னை மாநகராட்சியில் குப்பைகள் கொட்டினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தலைநகர் சென்னையில் கண்ட இடங்களிலும் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் சென்னையில் குப்பைகள் கொட்டும் வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றிற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இன்று அறிவிப்பு வெளியானது.
இதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குப்பைகளை துப்புரவு செய்ய சரியான வசதியை ஏற்படுத்தாமல் மக்கள் மீது கட்டண வசூல் செய்வதாக கண்டனம் தெரிவித்துள்ள அவர் உடனடியாக சென்னை மாநகராட்சி இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும், அப்படி செய்யாவிட்டால் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த கட்டணம் ரத்து செய்யப்படுவதோடு, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.