1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 22 நவம்பர் 2020 (16:52 IST)

கண்ணாடி முன் நின்று கரடி பொம்மை விலை கேட்பதா? அமித்ஷாவுக்கு முக ஸ்டாலின் பதிலடி

கண்ணாடி முன் நின்று கரடி பொம்மை விலை கேட்பதா?
தமிழகத்தில் இரண்டு நாள் பயணமாக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றைய நிகழ்ச்சி ஒன்றின் போது திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதை பார்த்தோம். குறிப்பாக வாரிசு அரசியல் செய்கிறது திமுக என்று அவர் கூறியது திமுகவினர்களை கடும் ஆத்திரத்தை உண்டாக்கியது 
 
இந்த நிலையில் திமுக பிரமுகர்கள் பலரும் அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்து வரும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். திமுக மீது வாரிசு அரசியல் விமர்சனம் வைப்பது கண்ணாடி முன் நின்று கரடி பொம்மை என்ன விலை என்று கேட்ட நகைச்சுவை போல் உள்ளது என்று அவர் கூறியுள்ளார் 
 
மேலும் எத்தனை வித்தைகள் செய்தாலும் 2021 தேர்தலில் மக்கள் பலமான அடியை பாஜக அதிமுக கூட்டணிக்கு வழங்குவார்கள் என்றும் அவர் பதில் கொடுத்துள்ளார். அரசு கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார் சொல்கிறார் அமித்ஷா என்றும் முக ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்