அமித்ஷா பேசுறது வடிவேலு காமெரி மாதிரி இருக்கு! – கலாய்த்த மு.க.ஸ்டாலின்!

MK Stalin
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 22 நவம்பர் 2020 (14:29 IST)
நேற்று அரசு விழாவிற்காக சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் அமித்ஷா திமுக குறித்து பேசியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டன் அறிக்கை விடுத்துள்ளார்.

நேற்று அரசு விழாவிற்காக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அரசு விழாவில் பேசிய அமித்ஷா “திமுகவிற்கும், காங்கிரஸுக்கும் ஊழல் குறித்து பேச தகுதி கிடையாது என்றும், அவர்கள் ஆட்சி காலத்தில் ஏகப்பட்ட ஊழல்கள் நடந்ததாகவும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின் ”தமிழகத்தில் ஊழல் செய்த ஊழல் இரட்டையர்களை மேடையில் வைத்துக் கொண்டு அமித்ஷா எதிர்கட்சிகளை குறை கூறி வருகிறார். வாரிசு அரசியல் குறித்து அமித்ஷா பேசுவது கண்ணாடி முன்பு நின்று கரடிப்பொம்மைக்கு விலை கேட்கும் காமெடி காட்சியை நினைவுப்படுத்துகிறது” என கிண்டலாய் தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக பிரச்சாரத்திற்கு சென்ற உதயநிதி கைது செய்யப்பட்டது குறித்து பேசியுள்ள அவர், ஒரு உதயநிதியை கைது செய்தால் ஒவ்வொரு ஊரிலும் உதயநிதி போன்ற பல ஆற்றல்மிக்க இளைஞர்கள் கிளர்ந்தெழுந்து வருவார்கள் என்றும் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :