வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (12:57 IST)

அண்ணா சாலையில் மு.கருணாநிதிக்கு சிலை! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை அண்ணாசாலையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உடல் மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சட்டமன்ற கூட்டத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு அண்ணா சாலையில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே அண்ணா சாலையில் அண்ணா, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட தலைவர்களுக்கு சிலை உள்ளது. இந்நிலையில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.