புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (12:38 IST)

அதிமுக கொடியுடன் பயணம்; ஓபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து கண்கலங்கிய சசிக்கலா!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி இரங்கலுக்கு சசிக்கலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை துணை எதிர்கட்சி தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது இரங்கலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மருத்துவமனைக்கு நேரில் சென்ற சசிக்கலா, ஓபிஎஸ்ஸை சந்தித்து கண்கலங்கி ஆறுதல் கூறியுள்ளார். மருத்துவமனைக்கு அதிமுக கொடி கட்டிய காரில் அவர் சென்றார். சசிக்கலா சிறையிலிருந்து விடுதலையான பின்பு முதன்முறையாக ஓபிஎஸ்ஸை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.