1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 26 டிசம்பர் 2018 (15:03 IST)

ஸ்டாலின் - தினகரன் எதிர்பாரா சந்திப்பு: டிபிஐ வளாகத்தில் திடீர் பரபரப்பு

7வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் எனவும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 
 
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்கிறது. இதனால் டிபிஐ வளாகமே பரபரப்பாக காணப்படுகிறது. 
 
தற்போது இந்த பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அமமுக தலைவர் தினகரனின் சந்திப்பு. ஆம், ஸ்டாலின் அங்கு சென்றிருந்த அதே நேரத்தில்தான் தின்கரனும் வந்திருந்தார். 
 
இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்ததால் விரோதம் பாராமல் நாகரீகம் கருதி பரச்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். ஏற்கனவே ஸ்டாலினும், தினகரனும் சந்தித்து கொண்டார்கள், பேசிக் கொண்டார்கள், ரக்சிய கூட்டணி வைத்துள்ளார்கள் என்று பேசப்பட்டாலும் இது மக்களுக்கு தெரிந்த முதல் சந்திப்பாக உள்ளது.