திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 டிசம்பர் 2018 (07:40 IST)

அமமுகவினர்களை சேர்த்து கொள்ள தயார்! ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்: எடப்பாடி பழனிச்சாமி

தினகரனின் அமமுக எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி அக்கட்சியின் நிர்வாகிகளையும் அதிமுகவில் சேர்த்து கொள்ள தயார் என்றும் ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் என்றும் முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகி தினகரன் அணியில் இணைந்ததால் பதவி இழந்த 18 எம்.எல்.ஏக்கள் மீண்டும் அதிமுகவில் சேர விரும்புவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு பிள்ளையார் சுழியாக செந்தில்பாலாஜி திமுகவுக்கு சென்றுள்ளதை அடுத்து அமமுக கூடாரமே காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று அமைச்சரவை கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 'அமமுகவில் உள்ள பதவியிழந்த எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி அக்கட்சியின் நிர்வாகிகளும் அதிமுகவில் இணைய விரும்புகின்றனர். அமமுகவில் உள்ள தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர்களை தவிர அனைவரையும் அதிமுகவில் சேர்த்து கொள்ள தயார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.