திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (12:14 IST)

மாணவிகளுக்கு ஏதாவதுன்னா தமிழக அரசு சும்மா விடாது..! – மு.க.ஸ்டாலின் உறுதி!

சமீப காலமாக மாணவிகள் தற்கொலை சம்பவம் அதிகரித்துள்ளது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து திருவள்ளூரிலும் மாணவி ஒருவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் குருநானக் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து பேசியபோது “சமீப காலமாக நடந்த சில நிகழ்வுகள் என்னை மனவேதனை அடைய செய்துள்ளன. பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல்ரீதியாக தொல்லை நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு மன, உடல்ரீதியாக நடக்கும் துன்புறுத்தல்களை தமிழக அரசு வேடிக்கை பார்க்காது.

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது. பெற்றோர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். உயிரை விடும் சிந்தனைகளை தவிர்த்து உயிர்பிக்கும் சிந்தனைகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.