ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (11:06 IST)

எங்களுக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி! – ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் கடிதம்!

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஆட்சிக்காலம் நிறைவடைந்த நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவி வகித்து வந்த நிலையில் அவரது ஆட்சிக்காலம் முடிவடைவதையொட்டி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளரான திரௌபதி முர்மு வெற்றி பெற்றார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ல் முடிவடைந்த நிலையில் அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்பித்தார். அவருக்கு பல மாநில அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “குடியரசு தலைவராக எங்கள் மாநிலத்திற்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி. தங்களின் வளமான அனுபவத்தால் நாடு தொடர்ந்து பயன்பெறும் என உறுதியாக நம்புகிறேன்” என கூறியுள்ளார்.